ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் பெண்கள் 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ள தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்-க்கு ரூ.75 லட்சம் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜின் வெற்றி, தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். எதிர்காலத்திலும் அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற்று பெருமை சேர்க்க வாழ்த்துகள் என கூறியுள்ளார்.