ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், தடகளம் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் வித்யா ராம்ராஜ், விஷால் ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நிதியுதவி பெற்றுவரும் இருவரும் கடின உழைப்பு, அர்ப்பணிப்பால் இச்சாதனையை படைத்துள்ளதாக பாராட்டியுள்ளார்.