சேலம் மாவட்டத்தில் நடக்கும் அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நெல் கொள்முதல் விலை உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். மேலும், “சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500, சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,545 ஆக உயர்த்தி வழங்கப்படும். நெல் கொள்முதல் விலை உயர்வால் 10 விவசாயிகள் பயன்பெறுவர்" என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “இலுப்பநத்தத்தில் ரூ. 10 கோடியில் வேளாண் விற்பனை நிலையத்தின் தரம் உயர்த்தப்படும்” என உறுதியளித்துள்ளார்.