இந்திய தலைமை தேர்தல் ஆணையர் 26ஆம் தேதி சென்னை வருகிறார்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வருகிற 26ஆம் தேதி சென்னை வருகிறார். அப்போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல் அதிகாரிகள், காவல்துறை மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில், தமிழகத்தில் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி