தீவிரமாக பரவும் சின்னம்மை; 5791 பேருக்கு பாதிப்பு

கேரள மாநிலத்தில் சின்னம்மை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 40 நாட்களில் 5,791 பேருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் 1,397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றமே இந்த நோய் பரவலுக்கு காரணம் என்று சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர். தினமும் 100க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது. குளிர்காலம் வெப்பமான பருவத்திற்கு மாறும்போது நோய் பரவல் அதிகரிப்பதாக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

தொடர்புடைய செய்தி