வார விடுமுறை தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் இன்று (நவ. 23) சிக்கன், மட்டன் கடைகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். நாமக்கல் பண்ணைகளில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.4 குறைந்துள்ளது. உயிருடன் ஒரு கிலோ ரூ.94-க்கும், முட்டைக்கோழி ரூ.122-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடைகளில் சிக்கன் விலை ரூ.200 முதல் ரூ.240 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடலாம். ஆட்டிறைச்சி ரூ.750-800-க்கு விற்கப்படுகிறது.