சிக்கன், மட்டன் விலை உயர்ந்துருச்சு.. காட்டுப்பன்றியை சுட உத்தரவிடுங்க: CPI MLA

கோழி, ஆட்டுக்கறி விலைகள் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு அரசு உத்தரவிட வேண்டும் என சட்டப்பேரவையில் இன்று (செப்.2) CPI MLA ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். சிக்கன் விலை ரூ.250 ஆகவும் மட்டன் விலை ரூ.600 ஆகவும் உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், மத்திய அரசை போல் மாநில அரசும் வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், எஞ்சியவற்றை விவசாயிகளே பார்த்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி