அதனால் இளம்பெண் மீது மோசஸ் ஆத்திரம் அடைந்தார். இளம்பெண்ணிடம் எவ்வளவோ பேச முயன்ற மோசஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனால், இளம்பெண்ணைப் பழிவாங்கத் திட்டமிட்ட மோசஸ், இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்தார். பின்னர் இளம்பெண்ணின் தந்தையிடம் போனில் பேசி, "உங்கள் மகளும் நானும் காதலித்து வருகிறோம். அவளை எனக்கு நீங்கள் திருமணம் செய்து கொடுங்கள். இல்லையென்றால் அவளின் ஆபாச புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவேன்" என மிரட்டும் தொனியில் கூறியிருக்கிறார். அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மோசஸ் மீது புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் மோசஸிடம் விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி