சுமார் 8 அடி, அகலம் 8 அடி நீளம் கொண்ட இந்த மழை நீர் கால்வாயில், தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக பணிகளை அதிகாரிகள் செய்து வந்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக இந்த பணி நடந்து வருகிறது. இந்த கால்வாய்க்கு அருகிலேயே அம்பேத்கர் நகர் அமைந்துள்ளது. இந்த அம்பேத்கர் நகரை சேர்ந்த ஐயப்பன் என்பவர், மழை நீர் கால்வாயில் தவறி உள்ளே விழுந்துள்ளார்.
அவரை உடனே மீட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் அந்த நபர் மது போதையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.