சென்னையில் அசோக் பில்லர் பகுதியில், கர்நாடக அரசு நிறுவனமான நந்தினி பால் பாக்கெட் ஏற்றி வந்த லாரியின் ஏசி இயந்திரம் பழுது காரணமாக வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் ஒரு பகுதி சேதமடைந்து, ஆயிரக்கணக்கான பால் பாக்கெட்டுகள் சாலையில் சிதறின. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.