அதிமுகவில் கடந்த 17 ஆம் தேதி இணைந்த லீமா ரோஸுக்கு அக்கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்த அவருக்கு, மகளிர் அணி இணைச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று வெளியான அறிக்கையில், லீமா ரோஸ் மார்ட்டின் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.