சென்னை: 9 பேருக்கு ஆயுள்; உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருவான்மியூரைச் சேர்ந்த ஏழுமலை கொலை வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் 9 பேரை குற்றவாளிகளாக அறிவித்து ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2010ல் நடந்த இந்த கொலையில், விசாரணை நீதிமன்றம் அனைவரையும் விடுவித்த நிலையில், காவல்துறை மேல்முறையீடு செய்தது. சாட்சிகள், தடயங்களை மறுஆய்வு செய்த நீதிபதிகள், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது எனக் கூறி, 9 பேருக்கு தண்டனை வழங்கினர். ஸ்டீபன்ராஜ், சந்துருவுக்கு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 பேரை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி