சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிந்தாதரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அரக்கோணத்தைச் சேர்ந்த கோபிநாத் என்ற தற்காலிக ஊழியர் 11 மாதங்களாக இங்கு வேலை பார்த்து வந்துள்ளார். பணத்திற்காக இந்த திருட்டில் ஈடுபட்டதாக கோபிநாத் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.