இதைத் தொடர்ந்து காவலாளி மாணிக்கம் தீயில் கருகி இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து வந்த மாம்பலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கேகே நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தீக்காயத்துடன் இறந்து கிடந்த அவர், தீ விபத்தில் இறந்து இருக்கலாம் என மாம்பலம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சிகரெட் பிடித்துக் கொண்டே மாணிக்கம் படுத்து உறங்கிய போது பஞ்சு மெத்தை எரிந்து தீ விபத்தில் இறந்திருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே முழு விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தில் காப்பாற்றிய ராணுவ வீரரை மணந்த சிறுமி!