முன்மாதிரி விருதுபெற திருங்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளால் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த திருநங்கைகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு 'சிறந்த திருநங்கைக்கான விருது' வழங்குகிறது. இந்த விருதின் கீழ் ரூ. 1 லட்சம் காசோலையுடன் பாராட்டுச் சான்று வழங்கப்படும். அரசு உதவி பெறாமல் சுயமாக முன்னேறிய, குறைந்தது 5 திருநங்கைகளின் வாழ்வில் முன்னேற உதவிய திருநங்கைகள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். பிப். 18-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பித்து, அனைத்து ஆவணங்களையும் பிப். 20 மாலை 5.45 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி