டிஜிட்டல் கைது: சென்னையை சேர்ந்த மூதாட்டியிடம் ரூ.24 லட்சம் மோசடி

சென்னையைச் சேர்ந்த மூதாட்டி சித்ரலேகாவிடம் (70) 'டிஜிட்டல் கைது' என்ற பெயரில் ரூ.24 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து, வீட்டில் சிறைபிடித்து பணம் பறிக்கும் கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த தேஜாஸ், பிரணவ், முகமது சமீர் ஆகியோர் மைசூரில் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள் மற்றும் வங்கி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி