மாநகர பேருந்து டிக்கெட் மின்னணு இயந்திரம் செயல்பாடு சீரானது

சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழக பஸ்களில் நேற்று மின்னணு பயணச்சீட்டு எந்திரங்களில் (இ. டி. எம்.) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால் டிஜிட்டல் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், நடத்துநர்கள் கைமுறை டிக்கெட்டுகளைப் பயன்படுத்தினர். இந்த தொழில்நுட்பக் கோளாறு நேற்று இரவு சரிசெய்யப்பட்டது. இதையடுத்து, மின்னணு டிக்கெட்டுகள் வழக்கம்போல் பயணிகளுக்கு வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி