அப்போது, 3 பேரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பிறகு சாப்பிட்ட பிரியாணிக்கு கடை ஊழியர் பணம் கேட்டுள்ளார். மாயாஜி 'யாரிடம் பணம் கேட்கிறாய்…. தினமும் நீ தான் எனக்கு ரூ. 10 ஆயிரம் பணம் தர வேண்டும்' என்று மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், கடை ஊழியரை அவரது காலில் வழி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் ரோஷன் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து அகில பாரத இந்து மக்கள் அமைப்பு துணை தலைவர் மாயாஜி உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகில் சிறைச்சாலை இல்லாத நாடு எது தெரியுமா..?