தி.மு.க ஆட்சியில் தனது மகளுக்கு அரசு மருத்துவமனையில் தவறாக சிகிச்சை அளிக்கப்பட்டதால் மகளின் கால் பாதம் அகற்றப்பட்டதாகக் கூறி காவலர் தண்டபாணி, தவறு செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை கோரி சீருடையில் தலைமைச் செயலகம் முன்பு மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. "9 வயதில் எனது மகளுக்கு எப்படி பிறவி ஊனம் என்று நீங்கள் சான்றிதழ் கொடுத்தீர்கள்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.