சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்ற இவர், ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக விளையாட உள்ளார். இந்நிலையில், இவருக்கு சொந்தமான கேரம்பால் ஈவென்ட் மற்றும் மார்க்கெட்டிங் நிறுவனம், அஸ்வின் வீடு இருக்கும் சாலைக்கு அஸ்வின் சாலை என பெயர் வைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இதனை பரிசீலனை செய்த சென்னை மாநகராட்சி மேற்கு மாம்பலம் ராமகிருஷ்ணாபுரம் முதலாவது தெருவுக்கு அஸ்வின் பெயரை சூட்ட முடிவு செய்துள்ளது. மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அனுமதி பெற்ற பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அஸ்வினுக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
“விஜயை மலையாள சினிமாவுக்கு கடத்த ஆசை”.. நடிகை சுவாசிகா