இதையடுத்து, அபய்சுந்தர் போனில் தொடர்பு கொண்டபோது, ரோகித்தின் போன் சுவிட்ச்-ஆஃப் செய்யப்பட்டது தெரியவந்தது. உடனே அபய்சுந்தர் சந்தேகத்தின் பேரில் கடையில் நகைகளை சரிபார்த்தபோது சுமார் 385 கிராம் (48 பவுன்) எடையுள்ள தங்க நகைகள் மாயமாகி இருந்தன. இந்த நகைகளை ரோகித் திருடிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இது தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் அபய்சுந்தர் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்றது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த ரோகித் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 42.5 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
வங்கிப் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவு