சென்னை: ஆட்டோவில் 400 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

சென்னை உள்ள ரிசர்வ் வங்கி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த ஆட்டோவை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோ டிரைவர் யாசின் ஆட்டோவில் துணிகள் இருப்பதாக தெரிவித்தார். இதில் சந்தேகமடைந்த போலீசார் துணி சுற்றி இருந்த பார்சலை பிரித்து பார்த்த போது, அதில் 400 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் யாசினிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி