சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் இன்று (ஜனவரி 11) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸ் வரையிலும் பதிவாகக்கூடும்.

தொடர்புடைய செய்தி