விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சமீப காலமாக அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது தொடர்கிறது. இன்று, பிரேமலதா விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. இருப்பினும், இந்த மிரட்டல் புரளி என சோதனையில் தெரியவந்துள்ளது. இதேபோல், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிக்குமார், சாக்ஷி போன்றோரின் வீடுகளுக்கும் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி