இந்நிலையில், கடந்த செப். 19ம் தேதி உதயகுமார் வீட்டில் இல்லாத நேரம், சூர்யா தன் நண்பர்களுடன் சேர்ந்து வீட்டில் இருந்த காரை எடுத்து சென்றார். 'காரை திருப்பி தர 3 லட்சம் ரூபாய் தர வேண்டும்; போலீசுக்கு சென்றால் குடும்பத்தையே கொன்று விடுவேன்' என மிரட்டி உள்ளார்.
அயனாவரம் போலீசில் அக். 3ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது. சூர்யா, மற்றும் அவரது கூட்டாளிகளான ஒரகடம் அன்பரசன், பாடி வினோத்குமார், வெற்றி, புழல் பரத் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.