முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசில் 2 காங்கிரஸ் அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பதிவில், கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று கூறிய விஜய் தனது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார். 59 ஆண்டுகளுக்குப் பிறகு, கதர் அணிந்த இரு காங்கிரஸ் அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பிடிப்பது, ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுக்கு உணர்ச்சிபூர்வமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் புதிய அரசு. புதிய நம்பிக்கை." என்று குறிப்பிட்டுள்ளார்.