விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கோவை சம்பவத்தின் பதட்டம் விலகும் முன்பே இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது. இது குழந்தைகள் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் அரசு கூடுதல் கவனமும் அக்கறையும் காட்ட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.