போதை மாத்திரை வைத்திருந்த வாலிபர் கைது

ராயப்பேட்டை போலீசாருக்கு திருவல்லிக்கேணி, பி. எம். தர்கா பிரதான தெருவில் போதை மாத்திரை விற்பனை நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. திங்கள்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் தப்பியோடிய இளைஞரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்து 40 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், அவர் திருவல்லிக்கேணி பி. எம். தர்கா பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி