ராமாபுரம் ஈ. வி. பி. சந்தோஷ் நகரில் தீபக் (26) என்பவர் நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கி பணிபுரிந்து வருகிறார். கடந்த 21ம் தேதி வேலைக்குச் சென்றபோது, வீட்டைப் பூட்டி சாவியை ஷு அலமாரியில் வைத்திருந்தார். இரவு வீடு திரும்பியபோது, பையில் வைத்திருந்த 2 தங்கச் செயின்கள், 2 தங்க நாணயங்கள் என மொத்தம் 3 சவரன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து விசாரித்த ராமாபுரம் போலீசார், மணிகண்டன்(26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.