சென்னை விமான நிலையத்தில், குடியுரிமை அதிகாரி அளித்த புகாரின் பேரில், போலியான இந்திய பாஸ்போர்ட் மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற நிஷாந்தினி (28) என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், நிஷாந்தினியின் பெற்றோர் 2009ல் இலங்கையிலிருந்து ராமநாதபுரம் மண்டபம் அகதிகள் முகாமிற்கு வந்துள்ளனர். கோவையில் பி.எஸ்சி. படித்த நிஷாந்தினி, போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்றது தெரியவந்துள்ளது.