மெட்ரோ பணியிடத்தில் கம்பி திருட்டு: மூன்று பேர் கைது

சென்னை கீழ்க்கட்டளை பேருந்து நிலையத்தில் மெட்ரோ பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் கடந்த 4ஆம் தேதி முதல் திருட்டு போயின. இதுகுறித்து அதிகாரி கருணாகரன் மடிப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த பிரவீன், நவீன்குமார், கலைச்செல்வன் ஆகிய மூவரை கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் 100 கிலோ இரும்பை திருடியது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி