தெற்கு ரயில்வே, வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் பாதையில் அதிவேக சோதனை ஓட்டத்தை வரும் 5ம் தேதி பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்தவுள்ளது. இந்த சோதனையின் போது தண்டவாளத்தின் உறுதித்தன்மை, சிக்னல் அமைப்பு, மின்சார வழித்தடம் மற்றும் ரயில் நிலையத்தின் தரம் ஆகியவை ஆய்வு செய்யப்படும். ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதல் கிடைத்தவுடன், வரும் 10ம் தேதி முதல் பறக்கும் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.