பள்ளிக்கரணை பவானி அம்மன் கோயில் தெரு, ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பள்ளிக்கரணை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்ற இருவரை பிடித்து சோதனை செய்ததில், விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 600 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. கஞ்சாவுடன் பிடிபட்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர்.