முதல்வர் விஜய்யின் வீடு இருக்கும் பகுதியான நீலாங்கரையில் ஏற்பட்டுள்ள மின்வெட்டை கண்டித்து ECR சாலையில் பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. அறிவிக்கப்படாத மின்வெட்டால் கடும் அவதியடைவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், தங்களுக்கு மின்சாரம் கிடைக்காதபோது, முதல்வர் வீட்டுக்கு மட்டும் எப்படி மின்சாரம் கிடைக்கிறது என்றும் கேள்வி எழுப்பினர்.