சென்னை திருமங்கலத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் மணிகண்டன், அவரது வீட்டின் வெளியே பிள்ளையார் பூஜையில் ஈடுபட்டிருந்தபோது, ஹெல்மெட் அணிந்த நபரால் சரமாரியாக வெட்டப்பட்டார். தற்காப்புக்காக தாக்கியதில் அந்த நபர் தப்பிச் சென்றார். மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மனைவி அளித்த புகாரில், திமுக பிரமுகர் ஆறுமுகம் அரசு நிலத்தை அபகரித்ததை மணிகண்டன் எதிர்த்ததால், அவர் தாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.