சென்னை பெருங்குடி பகுதியில் ஏற்பட்ட 3 மணிநேர மின்தடையால், ஒரு பிரபல தனியார் மருத்துவமனை இருளில் மூழ்கியது. இதனால், அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் டார்ச்லைட் உதவியுடன் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். நீண்ட நேர மின்வெட்டு காரணமாக மற்ற வார்டுகளில் இருந்த நோயாளிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.