சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று காலை 650 வாகனங்களில் 7 ஆயிரம் டன் காய்கறிகளே வந்ததால் அனைத்து காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.18இல் இருந்து ரூ.25க்கும், சின்ன வெங்காயம் ரூ.40இல் இருந்து ரூ.60க்கும், தக்காளி ரூ.15க்கும், உருளைக்கிழங்கு ரூ.30இல் இருந்து ரூ.45க்கும், கேரட் ரூ.25இல் இருந்து ரூ.40க்கும், பீன்ஸ் ரூ.100இல் இருந்து ரூ.150க்கும், அவரைக்காய் ரூ.50இல் இருந்து ரூ.100க்கும், முருங்கைக்காய் ரூ.50இல் இருந்து ரூ.90க்கும் விற்கப்பட்டது. இதேபோல் பீட்ரூட், சவ்வாரிசி, முள்ளங்கி, முட்டைக்கோஸ், வெண்டைக்காய், காரமணி, சேனைக்கிழங்கு, காலிஃபிளவர், வெள்ளரிக்காய் விலையும் அதிகரித்திருந்தது.