இந்த கடைகளில் விற்கப்படும் சிக்கன், மட்டன் பிரியாணி, ப்ரைட் ரைஸ் மற்றும் வடை, போண்டா, சமோசா, பஜ்ஜி உள்ளிட்ட அனைத்தும் திறந்தவெளியில் வைத்து விற்பனை செய்யப்படுவதால் அவற்றை சாப்பிடும் மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. குறிப்பாக, வறுத்த மீன், கறி, சிக்கன் ஆகியவை திறந்தவெளியில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கோயம்பேடு காய்கறி, பூ, பழம் ஆகிய மார்க்கெட்டுகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பெரும்பாலானவர்கள் சாலையோர தள்ளுவண்டி கடைகளில் சாப்பிடுகின்றனர். சுகாதாரமற்ற முறையில் உள்ள உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதி