கடும் பனிமூட்டம்: குறைந்த வேகத்தில் இயக்கப்பட்ட ரயில்கள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை நேரத்தில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பனிமூட்டம் அதிகரித்து வருவதால் மக்கள் வெளியில் நடமாட தயங்குகின்றனர். குளிருடன் பனியும் சேர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துவதால் வயதானவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இன்று பனிமூட்டம் காரணமாக பேருந்து மற்றும் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. மின்சார ரயில்கள் அதிகாலையில் குறைவான வேகத்தில் இயக்கப்பட்டன. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி சூழ்ந்திருந்ததால் முகப்பு விளக்குகளைப் போட்டு ரயில்கள் இயக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி