சென்னையில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால், சென்னை வர வேண்டிய மும்பை, பெங்களூரு, கோலாலம்பூர் உள்ளிட்ட 5 விமானங்கள் பெங்களூரு, திருப்பதிக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மேலும், சென்னையில் இருந்து புறப்படவிருந்த சுமார் 10 விமானங்கள் தாமதமானதால் பயணிகள் அவதிப்பட்டனர். புறநகர் மின்சார ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.