கடும் பனிமூட்டம்: விமான சேவை பாதிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியிலிருந்து நிலவிய கடுமையான பனிமூட்டம் காரணமாக, 40க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மும்பை, பெங்களூரு, கோலாலம்பூர், ஐதராபாத், துபாய், புனே உள்ளிட்ட 7 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூரு, கோவை, திருப்பதிக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். காலை 9 மணிக்கு மேல் பனி விலகியதும் விமான சேவைகள் சகஜ நிலைக்கு திரும்பின.

தொடர்புடைய செய்தி