சென்னை: வேலை வாங்கி தருவதாக மோசடி.. கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை வெட்டுவாங்கேணி, மகாலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் மகாராஜா (38). இவர் கடந்த 2-ம் தேதி சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, "நான் மேற்கண்ட முகவரியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். அதே பகுதியில் இறைச்சி கடையை கடந்த 14 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். கடந்த 2022 அக்டோபரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய பாபு என்பவர் எனக்கு அறிமுகமானார். அப்போது அவர் தன்னை முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மாப்பிள்ளை என்றும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ வேலு என்னுடைய நண்பர் என்றும் என்னிடம் கூறினார். 

தொடர்ந்து உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருக்காவது அரசு வேலை வேண்டும் என்றால் என்னிடம் சொல்லுங்கள், உடனே ஏற்பாடு செய்து தருகிறேன் என்று தெரிவித்தார். இதையடுத்து பாபுவின் பேச்சை நம்பி எனக்கு தெரிந்தவர்களிடம் பணம் வாங்கி கொடுத்தேன். இந்த வகையில13.20 கோடியை பாபுவிடம் மயிலாப்பூர் அலுவலகத்தில் வைத்து பல தவணைகளாக கொடுத்தேன். அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தி.மு.க எம்.எல்.ஏ வேலுவிடம் விளக்கம் கேட்டோம். "கட்சிக்காரர்களுடன் பாபு அலுவலகத்துக்கு வருவார். அவர் குறித்த தகவலைக் கேள்விப்பட்டதும் அலுவலகத்துக்கே வர வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். இந்த மோசடிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை" என்றார்.

தொடர்புடைய செய்தி