வியாசர்பாடியைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் அவரது நண்பர் சையது அலி ஆகியோர் அரும்பாக்கத்தில் உள்ள வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை, போனைப் பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அமைந்தகரை போலீசார் சூரியநாதன், பூவரசன், நவீன்குமார், ரித்திக்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.