மேலும், மின்வாரியத்தில் உலகம்மாள் பெயரில் உள்ள மின் அட்டையில் சாமுண்டீஸ்வரி என்ற பெயரை மாற்றி தர விண்ணப்பித்திருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜோசப்ராஜ் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, சாமுண்டீஸ்வரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில், கடந்த 8ம் தேதி சாமுண்டீஸ்வரியை போலீசார் கைது செய்து ஸ்டான்லி மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ரத்த குறைபாடு இருப்பதாக கூறி உள் நோயாளிகள் பிரிவில் அனுமதித்தனர். இதையடுத்து, மருத்துவ சிகிச்சை முடிந்த நிலையில், சாமுண்டீஸ்வரியை போலீசார் நேற்று புழல் சிறையில் அடைத்தனர்.