பூந்தமல்லி - வடபழனி இடையே இறுதி ஆய்வு தொடக்கம்

பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான இறுதி ஆய்வு இன்று முதல் மூன்று நாட்களுக்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ. எம். சவுத்ரி மேற்கொள்கிறார். பிரேக்கிங் தொழில்நுட்பம், தண்டவாளத்தின் தரம், ரெயில் பெட்டிகளின் வசதி, பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. 80-90 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதனை செய்யப்படும். ஆய்வறிக்கை ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின் மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கும்.

தொடர்புடைய செய்தி