சென்னை அண்ணாநகர் போக்குவரத்து போலீசில் பணிபுரிந்த 30 வயதான பெண் காவலர் கார்த்திகா ராணி, டி. பி. சத்திரம் போலீஸ் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் நேற்று (நவ.24) மாலை 4 மணியளவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் பிரிந்து சென்ற நிலையில், பிள்ளைகளை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு தனியாக வசித்து வந்ததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து டி. பி. சத்திரம் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.