சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் வழக்கம்போல் மக்கள் கூட்டம் அலைமோதியது. வஞ்சிரம், சங்கரா, நண்டு, இறால் போன்ற மீன் வகைகள் அதிகளவில் விற்பனையாகின. குறிப்பாக, வஞ்சிரம் கிலோ ரூ. 1,300-க்கு விற்பனை செய்யப்பட்டது. மீன்களின் வரத்து அதிகமாக இருந்ததால், மற்ற மீன்களின் விலை சற்று குறைவாகவே காணப்பட்டது.