மேலும் குடும்ப செலவுக்கு துணி வியாபாரம் செய்துள்ளார். அப்போது தனது பகுதியை சேர்ந்த தம்பதி காந்திகுமார் (35), சத்தியராணி (33) ஆகியோருடன் சரண்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், சரண்யாவிடம் இருந்து சத்தியராணி கொஞ்சம், கொஞ்சமாக 10 லட்சம் வரை பெற்றுள்ளார். இதன்பிறகு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் அவரது கணவர் காந்திகுமாரிடம் சென்று சரண்யா தனது பணத்தை கேட்டுள்ளார். அதற்கு காந்திகுமார், ‘’ என் மனைவியிடம் பணம் கேட்க வேண்டாம்’ நானே தந்துவிடுகிறேன்’ என்று கூறியதாக தெரிகிறது. இதன்பிறகு பணம் விஷயமாக காந்திகுமார் அடிக்கடி சரண்யாவிடம் பேசியுள்ளார். மேலும் வீடியோ காலில் சென்று சரண்யாவிடம் அன்பாக பேசி தனது வலையில் வீழ்த்த முயன்றதால் சுதாரித்துக்கொண்ட சரண்யா, ‘’எனக்கு அடிக்கடி போன் செய்ய வேண்டாம், பணத்தை கொடுங்கள்’’ என்று கறாராக கேட்டதுடன் பணம் தரவில்லையென்றால் காவல் நிலையத்தில் புகார் செய்வேன்’’ என எச்சரித்துள்ளார். இதுசம்பந்தமாக சரண்யா கொடுத்த புகாரின்படி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
‘காங்கிரஸ் 200 தொகுதிகளில் வெல்லும்’.. செல்வப்பெருந்தகை நம்பிக்கை