சென்னை: மெரினா கடற்கரையில் தேங்கிய தண்ணீர்

'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை நகர் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மெரினா கடற்கரை தெரியாத அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து இன்று (டிசம்பர் 2) நள்ளிரவு எண்ணூர்-மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 18 மணி நேரமாக சென்னைக்கு கிழக்கே 40 கிமீ தொலைவில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி