தமிழகத்தில் ஆட்சியமைக்க த.வெ.க.வுக்கு 118 எம்.எல்.ஏ.க்கள் தேவை. தற்போது 113 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்தாலும் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் 118 ஆக உயர்ந்தாலும், தற்காலிக சபாநாயகர் வாக்களிக்க முடியாததால் பலம் 117 ஆக குறையும். இதனால், ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க தீவிரம் காட்டுவதாகவும், த.வெ.க.வுக்கு ஆதரவு இல்லை என்றும் அ.தி.மு.க. தெரிவித்துள்ளது. இதனால் தமிழக அரசியல் பரபரப்பாக உள்ளது.